நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் தீர்க்கமான தினங்கள் தற்போது கடந்து செல்வதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.
அரசாங்கம் நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு தயாராகி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மத்தேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே விமல் வீரவங்ச இதனைத் தெரிவித்தார்.