தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 63ஆவது பிறந்த தினமானது சென்னையில் நள்ளிரவில் கொண்டாடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பிரபாகரனின் பிறந்த தினம் உலகம் முழுதும் உள்ள தமிழர்களினால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு சென்னையிலும் நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டப்பட்டு பிறந்தநாள் விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
தந்தை பெரியார் தி.கவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த பிறந்ததின கொண்டாட்டங்கள் விமர்சையான முன்னேட்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் பொது இடங்களில்பிரபாகரனுக்கு கேக் வெட்டுவதற்கு பொலிஸார் தடை விதித்தனர்.
அதனைத் தொடர்ந்து தனியார் கட்டடம் ஒன்றில் ஒன்று திரண்ட தி.கவினர் பிரபாகரனையும், தமிழீழத்தினையும் வாழ்த்தி கோஷங்கள் எழுப்பி பிரபாகரனின் பிறந்த தினத்தினை விமர்சையாக முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, சென்னையில் பல்வேறு இடங்களிலும் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.