முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனின் (Deshabandu Tennakoon) நிறுத்திவைக்கப்பட்டுள்ள சலுகைகளை மீள வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சனத் நந்திக குமாரநாயக்கவுக்கு (Sanath Nandika Kumaranayake) கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாத்தறை (Matara) நீதவான் நீதிமன்றத்தால் கைது செய்ய உத்தரவிடப்பட்ட தேசபந்து தென்னகோனுக்கு வழங்கப்பட்ட காவல்துறை பாதுகாப்பு மற்றும் கார் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் நிறுத்தி வைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தற்போது தலைமறைவாகியுள்ள முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு (Deshabandhu Tennakoon) வழங்கப்பட்ட கார் மற்றும் காவல்துறை பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் நிறுத்தி வைக்க அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நீதிமன்ற பிடியாணை
இருப்பினும், அவரது பாதுகாப்பு மற்றும் சலுகைகளை திரும்பப் வழங்குமாறு காவல்துறை தலைமையகத்திலிருந்து ஜனாதிபதியின் செயலாளர் சனத் நந்தித குமநாயக்கவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றப் பிரிவின் காவல்துறை அதிகாரி ஒருவர், துப்பாக்கிச் சூட்டில் பலியானமை தொடர்பாக தேதேசபந்து தென்னகோனை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
எனினும் உத்தரவுக்கு அமைய தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தில் முன்னிலையாவதை தவிர்த்து வருவதாகவும், அவரைக் கைது செய்ய குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு அதிகாரிகள் பல குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.