வாகனங்களில் பயணிக்கும்போது சமிக்ஞை விளக்குகள் தேவைக்கு ஏற்றவாறு கண்டிப்பாக ஒளிர வேண்டும்.
இதனால் விபத்துக்களை அதிக அளவில் தவிர்க்க முடியும்.
இதேபோன்றே பிரேக் லைட் ஒளிரும்போதே முன்னால் செல்லும் வாகனம் நிறுத்தப்படவுள்ளமை அல்லது வேகம் குறைக்கப்படவுள்ளமை தொடர்பான தகவல் பின்தொடர்ந்து பயணிப்பவரை சென்றடையும்.
அவ்வாறு சென்றடையும் சந்தர்ப்பத்தில் பின்தொடர்பவர் தனது வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்தி விபத்தை தவிர்க்க முடியும்.
இச் செயன்முறைய மேம்படுத்தும் நோக்கில் Cosmo எனும் நிறுவனம் புது முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதன்படி தலைக் கவசத்தில் வயர்லெஸ் பிரேக் லைட் தொழில்நுட்பத்தினை உருவாக்கியுள்ளது.
இத் தொழில்நுட்பமானது வாகனத்தின் பிரேக்கினை பயன்படுத்தும்போது தலைக் கவசத்திலுள்ள மின் விளக்கிற்கும் சமிக்ஞையை அனுப்புகின்றது. இதனால் தலைக்கவசத்தில் உள்ள மின்விளக்கு ஒளிர ஆரம்பிக்கின்றது.
இதனைக் கொண்டு பின்தொடர்பவரை மேலும் எச்சரிக்கை செய்து விபத்துக்களை தவிர்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.