தமிழ்நாட்டு முதலமைச்சரை நலம் விசாரிக்க சென்ற ஈழத் தமிழர்கள்
ஈழத்தமிழர் நட்புறவு மையம் சார்பாக திரு.காசி ஆனந்தன் தலைமையில் திரு.சிவம் மற்றும் திரு.திருநாவுக்கரசு ஆகியோர் உள்ளடங்கிய குழுவே இன்று செவ்வாய்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு அப்பலோ மருத்துமனைக்கு சென்று திருப்பியுள்ளது.
அப்பலோ மருத்துவமனையில் அ.தி.மு.க வின் மூத்த அமைச்சர்களைச் சந்தித்த காசி ஆனந்தன் தலைமையிலான குழு தமிழ்நாட்டு முதலமைச்சரின் உடல் நலம் குறித்து கேட்டு அறிந்துகொண்டனர். சந்திப்பானது அரைமணி நேரம் நீடித்தது.
ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை, தனிநாட்டுக்கான பொதுவாக்கெடுப்பு, தனித் தமிழீழமே தீர்வு என பல தீர்மானங்களை சட்டசபையில் நிறைவேற்றிய தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் விரைவில் குணமடைந்து தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழீழ மக்களுக்கும் சேவையாற்ற வேண்டும் எனவும் ஈழத்தமிழர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.