தமிழ்த் தொழிலதிபரா நீங்கள்? வடக்கு முதலமைச்சர் விக்கியைச் சந்திக்கப் போகின்றீர்களா?
மார்க்கம் – முல்லைத்தீவு இணை நகர முயற்சி தமிழ்த் தொழிலதிபர்களின் பங்குபற்றுதலால் மாத்திரமே உயிர் பெற முடியும் என்றும் உங்களின் பங்கை நேரடியாகச் செய்ய முடியுமென்றும் தெரியவந்துள்ளது.
மார்க்கம் நகரை முல்லைத்தீவு நகரோடு இணைநகராக்கும் திட்டம் மார்க்கம் நகராட்சியால் முன்னெடுக்கப்பட்டு அது தைப் பொங்கல் தினத்தன்று உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடப்படுகின்றது.
முல்லைத்தீவு மக்களின் பொருளாதார நல்விருத்தியானது இங்குள்ள தொழிலதிபர்கள் தங்களது தொழில்வளங்களை அந்த மண்ணிற்கு விஸ்தரிப்பதன் மூலம் இடம்பெற முடியும். குறிப்பாக 2009க்கு பின்னர் வாழ்வாதரங்கள் இழந்தவர்களினூடாக உங்கள் தொழில்முயற்சிகளையும் விருத்தி செய்ய முடியும்.
இதற்கான அனுகூலங்கள், சாதகங்கள் பற்றி ஆராய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள மார்க்கம் நகர 7ம் வட்டாரக் கவுன்சிலர் திரு. லோகன் கணபதி அவர்கள் சந்தித்து ஆலோசனைகளைப் பெற விரும்புகின்றார்.
இதற்கான சந்திப்புக்களில் பங்குபற்ற விரும்புபவர்கள் லோகன் கணபதி அவர்களை இந்த மாதம் 7ம் திகதி சனிக்கிழமைக்கு முன்பதாக [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலேயோ அல்லது 905-479-7748 என்ற இலக்கத்திலேர் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.