எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இலக்கு வைத்து, வடக்கு கிழக்கில் புதிய தமிழ் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையில் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் ஊடகம் ஒன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொது செயலாளர் ஆனந்தசங்கரியை தொடர்பு கொண்டு வினவிய போதும், இந்த தகவலை அவர் மறுத்தார்.
எனினும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தனித்தோ, கூட்டணியாகவோ போட்டியிடுவதற்கான தயார்ப்படுத்தல்களை தமிழர் விடுதலைக் கூட்டணி மேற்கொண்டுவருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்காக பல்வேறு கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகவும் ஆனந்தசங்கரி கூறினார்