தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி.. அவசரச் சட்டத்திற்கு மத்திய அரசு பரிசீலனை
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் கொண்டுவர மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என தமிழகம் முழுவதும் ஆங்காங்கே தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் பொங்கலுக்குள் தீர்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் முன்னதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் கொண்டுவர மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக மத்திய சட்ட அமைச்சகத்திடம் அவசர சட்ட வரைவை பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.