தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட நடிகை திரிஷா சிறைப்பிடிப்பு
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக ஜல்லிக்கட்டு நடைபெறாத நிலையில் தற்போது, ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தியே தீருவோம் என பொதுமக்கள் ஒரே குரலில் உரக்க கூறி வருகின்றனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணமான பீட்டா அமைப்பின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை திரிஷாவை தமிழர்கள் சிறைபிடித்துள்ளனர்.
சிவகங்கை அருகே காரைக்குடியில் படப்பிடிப்புக்கு வந்த நடிகை திரிஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சிறைபிடித்துள்ளனர்.
பீட்டா அமைப்பிற்கு ஆதரவாக இருக்கும் நடிகை திரிஷாவுக்கு எதிராக கோஷங்கள், கண்டன முழக்கங்கள் எழுப்பி ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.