தமிழக அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவிகித இடங்களை ஒதுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மருத்துவர் காமராஜ் உட்பட சிலர் தொடர்ந்த இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவிகித இடத்தை ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டதுடன் இதுதொடர்பான தகவல்களை கல்லூரி இணையதளத்தில் வெளியிடவும் ஆணை பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவு சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகளுக்கு பொருந்தாது என்று கூறியுள்ள உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
2000ம் ஆண்டு முதல் 50 சதவிகித இடங்களை பெறுவதில் தாமதமாக இருந்த காரணத்தினால் குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.