தன் காதலனுக்காக சண்டையில் இறங்கிய காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் இதுவரை தன் காதல் குறித்து எங்கும் மனம் திறந்தது இல்லை. தனக்கு பிடித்தவரை இன்னும் பார்க்கவில்லை என்று தான் திருமணம் குறித்து கேட்கும் போதெல்லாம் கூறுகிறார்.
இது ஒரு பக்கம் இருக்கட்டும், இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் கவலை வேண்டாம்,
இப்படத்தில் இவர் ஜீவாவை காதலிக்க, இவருக்கு போட்டியாக சுனைனாவும் ஜீவாவை காதலிப்பாராம், ஒரு கட்டத்தில் வில்லி போல் தன் காதலை பாதுகாக்க காஜல் சில முயற்சிகளை செய்வாராம், படத்தின் காஜல், சுனைனா மோதல் காட்சிகள் பெரிதும் பேசப்படுமாம்.