தெலுங்கு, கன்னடம், தமிழில் தயாராகும் படம் உச்சக்கட்டம். சாய் தன்ஷிகா, தன்யா ஹோப் ஆகியோருடன் பாலிவுட் நடிகர்களான தாக்கூர் அனூப் சிங், கபிர் துஷன் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்கள் தவிர, ஸ்ரத்தா தாஸ், ஹர்சிகா பூனச்சா, பிரபாகர், வம்சி கிருஷ்ணா உள்பட பலர் நடித்துள்ளனர். இது ஹீரோயின்களை மையப்படுத்தும் ஆக்ஷன் கதை.
சுனில்குமார் தேசாய் இயக்கி உள்ளார், பி.ராஜன், கே.எம்.விஸ்னுவர்த்தன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சஞ்சய் சக்ரவர்த்தி பின்னணி இசை அமைத்துள்ளார். பெரிய பட்ஜெட்டில் தயாரான படம். 3 மொழிக்குமான டிரைலர் வெளியீட்டு விழா, பெங்களூருவில் நடந்தது. இதில் திரைப்படத்தில் பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் கலந்து கொண்டனர். சாய் தன்ஷிகா மட்டும் கலந்து கொள்ளவில்லை.
படத்தில் சாய் தன்ஷிகாவின் முக்கியத்தும் குறைக்கப்பட்டதால் அவர் செல்லவில்லை என்றும், வேறு படத்தின் படப்பிடிப்பில் அவர் இருந்ததால் செல்ல முடியவில்லை என்று ஒரு தகவலும் கூறுகிறது. சாய் தன்ஷிகாவின் கேரியரில் இது முக்கியமான படம். அப்படி இருந்தும் அவர் செல்லாதது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.