நடிகை அமலாபால், இயக்குநர் ஏ.எல்.விஜய் உடனான திருமண வாழ்க்கை முறிவுக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழ், மலையாளம் தாண்டி தெலுங்கிலும் இப்போது நடிக்கத் தொடங்கியுள்ளார் அமலாபால்.
ஏற்கனவே சில தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் இப்போது ‘ஆயுஷ்மான் பவ’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் அமலாபால் முஸ்லிம் பெண்ணாக நடிக்கிறார். இந்தப் படம் ஒரு காதல் கதையைக் கொண்டு உருவாகிறதாம்.
அறிமுக இயக்குநர் சரண்தேஜ் ‘ஆயுஷ்மான் பவ’ படத்தை இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி உள்ளது. இப்படத்தில் இன்னொரு நாயகியாக சினேகா நடிக்கிறார். தெலுங்கில் இந்தப் படத்தின் மூலம் ஒரு இடத்தைப் பிடிக்க நினைக்கிறார் அமலா பால்.
கார் வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கிய அமலா பால், சில நாட்கள் கேரளா, இமயமலைப் பகுதியில் இருக்கும் லடாக் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா சென்று வந்தார். தனிமையை விரட்ட ஜாலியாக டூர் சென்ற அவர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தவிருக்கிறார்.