தனமல்லவில – வெல்லவாய பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனமல்லவில – வெல்லவாய பிரதான வீதியின் தெலுல்ல என்ற பகுதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியொன்றும் காரொன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களை வைத்தியசாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சடலங்கள் பிரோத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.