ட்ரூடோ, டிரம்ப் நேருக்கு-நேர் முதல் சந்திப்பு குறித்த பரப்பு!
ஒட்டாவா-பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று காலை வாசிங்டன் நோக்கிய பயணத்தை தொடங்கியதை தொடர்ந்து பிரதமர் மற்றும் யு.எஸ்.அதிபர் டொனால்ட் டிரம்பின் நேருக்கு-நேர் சந்திப்பு குறித்த பரபரப்பு உச்ச கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ட்ரூடோ மற்றும் டிரம்ப் இருவரும் காலை 11மணிக்கு ஓவல் காரியாலயத்தில் ஒரு தனிப்பட்ட சந்திப்பை மேற்கொள்வர். தொடர்ந்து கனடா-யு.எஸ். உறவுகள் குறித்த விரிவான சந்திப்பு மற்றய உயர் அதிகாரிகளுடன் இடம்பெறும்.
ஒட்டாவாவில் இருந்து புறப்பட்ட விமானம் விமானத்தில் பனி காணப்பட்டதால் சிறிது தாமதமானது.
வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்ரியா விறிலான்ட், பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜிட் சய்ஜன், பொது பாதுகாப்பு அமைச்சர் றல்ப் குட்டேல், போக்குவரத்து அமைச்சர் மார்க் கார்னெயு, நிதி அமைச்சர் பில் மொர்னியு ஆகியோர் பிரதமருடன் இணைந்து கொள்வர்.
இன்றய சந்திப்பின் பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள விறிலான்ட், ஹர்ஜிட், குட்டேல் மூவரும் கடந்த வாரம் வாசிங்டன் சென்றடைந்துள்ளனர்.
ட்ரூடோவும் டிரம்பும் பெண்கள் வர்த்தக தலைவர்கள் மற்றும் பெண் தொழில் முனைவோர் குறித்த வட்ட மேசை விவாதம் நடாத்த திட்டமிட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் இருவரும் மதிய போசனத்தில் கலந்து கொள்வர். நடுப்பகல் மதியம் கூட்டு செய்தி மகாநாடொன்றை நடாத்த உள்ளனர்.