டேவிட் ஜோன்ஸ்டன் தம்பதியினர் யூதர்களின் நினைவிடத்திற்கு விஜயம்
கனடாவின் தலைமை ஆளுநர் டேவிட் ஜோன்ஸ்டன் நேற்று (புதன் கிழமை) ஜெருசலேமில் அமைந்துள்ள Holocaust memorial Yad Vashem இற்கு விஜயம் மேற்கொண்டார்.
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனிய பகுதிகளுக்கான சுற்றுப் பயணத்தின் ஒரு கட்டமாகவே, அவர் தனது பாரியாருடன் குறித்த நினைவிடத்திற்கு சென்றார்.
இதன்போது குறித்த அருங்காட்சியகத்தில் நாஸி படைகளால் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களின் புகைப்படங்கள் அமைந்துள்ள பிரமாண்ட அமைப்பையும் ஜோன்ஸ்டன் தம்பதியினர் பார்வையிட்டனர். பின்னர், அங்கு இடம்பெற்ற விழாவிலும் கலந்து கொண்டனர்.
இதன்போது இரண்டாம் உலகமகா யுத்த காலப்பகுதியில் நாஸி படைகளால் 6 மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டமையின் நினைவாக ஜோன்ஸ்டன் தம்பதியினர் அடிக்கல் நாட்டியதோடு, சுடரினையும் ஏற்றி வைத்தனர். பின்னர் குறித்த இடத்தில் மலர்ச் செண்டு வைத்து மரியாதை செலுத்தினர்.
இதேவேளை நேற்று காலை இஸ்ரேல் ஜனாதிபதி ருவென் ரிவ்லினை சந்தித்து கலந்துரையாடிய ஜோன்ஸ்டன், இரு தரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது கனேடிய தலைமை ஆளுநர் என்ற பெருமையை ஜோன்ஸ்டன் பெற்றுள்ளார்.
– See more at: http://www.canadamirror.com/canada/73266.html#sthash.JVoOzfyL.dpuf