டூ பிளஸ்ஸியின் மேன்முறையீடு நிராகரிப்பு
பந்தினை சேதப்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணித் தலைவர் டூ பிளஸ்ஸி முன்வைத்திருந்த மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுடன் கடந்த நவம்பர் மாதம் 22ம் திகதி இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின் போது அவர் பந்தினை சேதப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு போட்டிப் பணத்தில் 100 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது.
எனினும் இந்த தீர்ப்புக்கு எதிராக அவர் சர்வதேச கிரிக்கட் சபையின் நீதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த முறைப்பாட்டை நீதி ஆணையாளர் மைக்கல் பெலோஃப் நிராகரித்துள்ளார்.
இதன்படி டூ பிளஸ்ஸி மீதான குற்றச்சாட்டு மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.