டிரைவர் இல்லாத டாக்சி
ஆனால் சிங்கப்பூரில் டிரைவர் இல்லாத டாக்சி சேவை அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது.
உலகிலேயே டிரைவர் இல்லாத இத்தகைய சேவை முதன் முதலில் அறிமுகமாவது சிங்கப்பூரில்தான்.
இதனை கூகுள் நு டோனோமி என்ற பெயரிலான ஸ்டார்ட் அப் நிறுவனம் தான் சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தியுள்ளது.
தொடக்கத்தில் 6 கார்களை இது போல் டிரைவர் இன்றி இயக்கும் இந்நிறுவனம் 2018-ம் ஆண்டுக்குள் சிங்கப்பூர் முழுவதும் டிரைவர் இல்லாத டாக்சி சேவையை வழங்குவதினையே நோக்காக கொண்டுள்ளது.
முதல் நாளன்றே 12 பேர் இந்நிறுவன செயலியைப் பதிவிறக்கம் செய்து வாடிக்கையாளர்களாக பதிவு செய்து கொண்டுள்ளனர்.
சோதனை ஓட்டங்கள் முடிந்துவிட்டன. இனி குறிப்பிட்டவழித்தடங்களில் இதைச் செயல்படுத்த வேண்டியதுதான் என்று நு டோனோமி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கார்ல் இயாக்னெமா தெரிவித்துள்ளார்.
இயந்திரங்கள் தான் எதிர்கால உலகத்தை ஆல போகின்றன என்பதற்கு இது ஒரு முன்னோட்டம் என்பதில் ஐயமில்லை