டிரம்பின் பயணத்தடையால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளிற்கு உயிர்-காக்கும் சுகாதார பராமரிப்பு வழங்க ஒன்ராறியோ முன்வந்துள்ளது.
அண்மைக்கால டிரம்பின் பயணத்தடையால் யு.எஸ்சில்ரத்து செய்யப்பட்ட உயிர-காக்கும் பிள்ளைகளிற்கான சத்திர சிகிச்சைகளை ஒன்ராறியோ வழங்கும் என ஒன்ராறியோவின் சுகாதார மற்றும் நீண்ட-கார பராமரிப்பு அமைச்சர் எரிக் ஹொஸ்கின் அறிவித்துள்ளார்.
நோயுற்ற பிள்ளைகளிற்கு இது ஒரு இக்கட்டான நேரம்.எங்கள் அமைச்சும் ஒன்ராறியோவின் சிறப்பு மிக்க சிறுவர் வைத்தியசாலைகளும்-உலகின் மிக சிறந்த பராமரிப்பு வழங்கும்-பொறுப்பேற்று விரைவாக செயற்படுமென ஹொஸ்கின் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் புதிய பயண கட்டுப்பாடுகளால் யு.எஸ்சில் திட்டமிடப்பட்டிருந்த சிறுவர்களின் சிறப்பு உயிர்-காக்கும் சத்திரசிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டன.இதற்கு காரணம் இவர்கள் பிறந்த இடங்களே எனவும் அமைச்சர் தெரிவிததுள்ளார்.
ஒன்ராரியர்களான நாங்கள் எங்களால் உதவ முடியும் என தெரிந்தால் அதற்கு பதிலளிக்க வேண்டிய கடமைப்பாடுடையவர்கள் எனவும் கூறியுள்ளார்.
பயண தடையால் எத்தனை பிள்ளைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியாது.