டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலியா – இலக்கை எட்டுமா பாகிஸ்தான்?
ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 490 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் (பகல்- இரவு) போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 429 ரன் குவித்தது. அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தட்டுத்தடுமாற நேற்றைய 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுக்கு 97 ஓட்டங்கள் எடுத்தது.
இன்று 3-ம் நாள் ஆட்டம் நடந்தது. சர்பிராஸ் அகமது அரைசதம் அடித்தார். முகமது அமீர் 21 ரன்னிலும், ரஹத் அலி 4 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் 55 ஓவரில் 142 ஓட்டங்களுடன் சகல விக்கட்டுகளையும் இழந்து பாலோ-ஆன் ஆனது.
ஆனால் பாலோ-ஆன் கொடுக்காமல் 287 ஓட்ட முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை விளையாடியது. 2வது இன்னிங்சில் 39 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 202 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது டிக்ளேர் செய்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானிற்கு 490 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.
இந்த கடுமையான இலக்கை எதிர்நோக்கி பாகிஸ்தான் அணியின் அசார் அலி, சமி அஸ்லாம் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பாகிஸ்தான் அணியின் ஓட்ட எண்ணிக்கை 31 ஆக இருக்கும்போது சமி அஸ்லாம் 15 ஓட்டத்தில் ஸ்டார்க் பந்தில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த பாபர் ஆசம் 14 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினார். 3-வது விக்கெட்டுக்கு அசார் அலியுடன் அனுபவ வீரர் யூனிஸ்கான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3-வது நாள் ஆட்ட முடிவில் மேலும் விக்கெட்டுக்கள் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.
பாகிஸ்தான் அணி 3-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்துள்ளது. அசார் அலி 41 ஓட்டங்களுடனும், யூனிஸ்கான் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.
தற்போது பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 420 ரன்கள் தேவை கைவசம் 8 விக்கெட்டுக்கள் உள்ளன. இரண்டு நாட்கள் மீதம் உள்ளன. சுமார் 180 ஓவருக்கு மேல் ஆஸ்திரேலியா வீச வேண்டும்.
180 ஓவரில் 420 ஓட்டங்கள் என்பது பெரிய விஷயம் அல்ல. ஆனால், பாகிஸ்தான் அணி அந்த இலக்கை எட்டுமா என்பது சந்தேகம்