நாடு முழுவதும் தமிழர்களை அழிப்பதே ஞானசார தேரரின் திட்டம் ..! அம்பலமாகும் முக்கிய ஆதாரம்
நாட்டில் இனவாதத்தினை முற்றாக அழிக்காவிடின் தேசிய நல்லிணக்கம் என்பது அரசிற்கு எப்போதும் எட்டாக் கனியாகவே அமைந்து போகும் என்பது வெளிப்படையாக தெரிந்த உண்மை.
அண்மையில் ஞானசாரதேரர் அரசு தரப்பினருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் அவர் அடங்கிவிட்டதாகவே பெரும்பாலும் கூறப்பட்டது.
எனினும் முழு நாட்டிலும் கலவரத்தை ஏற்படுத்தி மீண்டும் யுத்தம் ஒன்றினை உண்டாக்கி விட தேரர்கள் தயாராகி விட்டனர்.
மட்டக்களப்பு படையெடுப்பின் போது ஞானசார தேரரின் போலி வேடம் அவரது திட்டம் என்ன என்பது ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது.
மட்டக்களப்பிற்கு சென்றபோது ஞானசாரரின் செயற்பாடுகள் மற்றும் அவரது வார்த்தைப் பிரயோகங்கள் காணொளி ஒன்றில் தெளிவாக பதிவாகி உள்ளது.
குறித்த காணொளியில்
“இப்படியே பொறுத்துக்கொண்டிருந்தால் சரிவராது நாடு முழுவதும் அடிக்கத் தொடங்குங்கள், தமிழனுக்கு ஒரு நீதி எமக்கு ஒரு நீதியா?”
“நாட்டில் இருப்பது முதுகெலும்பு இல்லாத பொலிஸாரே. நாட்டை ஆளும் பிரதான இடங்களில் இருப்பது தமிழன்”.
“இன்று எம்மை விடாவிட்டால் விளையாட்டு என்று மட்டும் நினைத்துக் கொள்ளாதீர்கள், நாடு முழுவதும் அழிவுகள் ஏற்படும். இந்த மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள்”.
“இப்போது நடக்கும் பிரச்சினைகளை பார்த்து நாடு முழுவதும் கலவரங்கள் ஏற்பட்டால் என்ன செய்வது அதற்கு வாய்ப்புகள் உண்டு”.
“இந்த பொலிஸாரை அடக்குவது ஒன்றும் பெரிய விடயம் இல்லை ஒரு பஸ்ஸை கொண்டு வாருங்கள் அனைவரைம் தரைமட்டமாக்கி விட்டு சென்று விடுவோம்”.
இவை ஞான சார தேரர் வெளிப்படுத்தியுள்ள வார்ததைகள்.
அத்தோடு பொலிஸாரை வெறுக்கத்தக்க தகாத வார்த்தைகளை பிறப்பித்து திட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல் பொலிஸாரை வேண்டும் என்றே சீண்டுகின்றார்.
மேலும் பொலிஸாரின் பெயர்களையும் இலக்கத்தகடுகளையும் தொலைபேசிகளில் புகைப்படங்களை எடுக்கவும் பிக்குகளுக்கு ஆணைகளையும் பிறப்பிக்கின்றார். அதனைத் தொடர்ந்து பிக்குகளும் பொலிஸாரை அவதூறாக பேசுகின்றனர்.
இவ்வாறாக பொலிஸார் பிக்குகள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்பதற்காகவே செயற்படுத்தய நாடகங்கள் அனைத்தும் குறித்த காணொளியில் தெளிவாக பதிவாகி உள்ளது.
குறிப்பாக அனைத்து சமூக வலைத்தளங்களும் நடப்பவற்றை நேரலையாக பதிய விடுங்கள் என்ற கட்டளையையும் ஞான சார தேரர் விடுத்துள்ளதோடு,
அதன் பின்னர் இவற்றினை பார்த்து விட்டு நாடு முழுவதும் அடிக்க முற்பட்டால் என்ன செய்வது பல தடவைகள் அழுத்தி கூறுகின்றார்.
இந்த செயற்பாடுகள் அவர்களின் திட்டம் என்ன என்பதை தெளிவாக வெளிப்படுத்துகின்றது.
அதாவது பொலிஸார் தம்மை தாக்க வேண்டும் அதனை பயன்படுத்தி நாடு முழுவதனையும் இரத்தக் களரியாக்க வேண்டும் என்பதே ஞானசார தேரரின் சதித் திட்டம் என்பது இந்தக் காணொளியை பார்க்கும் எவருக்கும் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
ஆனாலும் அரசு இன்னும் பொருமை காத்துக் கொண்டிக்குமானால் எந்த வகையிலும் ஒற்றுமை மிக்க நல்லிணக்க நாடாக இலங்கையை மாற்றியமைக்க முடியாது.
எந்த இனம், எந்த மதம் என்ற பாகுபாடும் பக்கச்சார்புகளும் இன்றி அரசு யாராக இருந்தாலும் தகுந்த நடவடிக்கை எடுக்கா விட்டால் இன்னும் எத்தனை வருடங்கள் கடந்தாலும் அரசு நினைப்பது ஒருபோதும் மட்டும் சாத்தியம் இல்லை.
இதேவேளை இலங்கையின் அரசியல் விதிமுறைகளுக்கு அமைய பிக்குகளை கைது செய்வது ஒருவகையில், இனக்கலவரத்திற்கு அரசே வழிசமைத்து விடும் என்பதிலும் உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றது.
ஆனாலும் இப்போதைய சூழ்நிலையில் இனவாதம் ஆழப்பதிய முன்னர் அரசு தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது என்பதே நிதர்சனம்.