‛மூன்று பேர் மூன்று காதல், ஜெய்ஹிந்த் 2′ படங்களில் நடித்தவர் சுர்வீன் சாவ்லா. சினிமா வாய்ப்புக்காக தானும் பாலியல் ரீதியான சங்கடங்களை சந்தித்ததாக ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறுகையில், பட வாய்ப்பிற்காக ஒரு இயக்குநர் எனது முன்னழகை பார்க்க வேண்டும் என்றார், மற்றொரு இயக்குநர் எனது தொடையை காண்பிக்க சொன்னார். 5 முறை பாலியல் ரீதியான சீண்டல்களை சந்தித்தேன். அதில் மூன்று முறை தென்னிந்திய சினிமாவிலும், 2 முறை ஹிந்தியிலும் நடந்தது.
ஒரு முறை நடிகை தேர்வுக்கு சென்ற போது, நான் அதிக எடையுடன் இருப்பதாக கூறி நிராகரித்தனர். அப்போது நான் 56 கிலோ மட்டுமே இருந்தேன். அந்த சமயத்தில் அப்படி சொன்னவருக்கு கண்ணாடி வாங்கி தர எண்ணினேன் என கூறியுள்ளார்.