ஜேர்மனியில் மீண்டும் தீவிரவாத தாக்குதலா?
ஜேர்மனியில் சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்ட வாலிபரின் வீட்டிலிருந்து ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.
சிரியா, ஆப்கானிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து அகதிகளாக வெளியேறிய மக்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இவர்களில் அதிகமான நபர்களுக்கு ஜேர்மனி அடைக்கலம் அளித்துள்ளது, இந்நிலையில் ஜேர்மனியில் நிகழும் தீவிரவாத தாக்குதல்களுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கும் என கருதப்படுகிறது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை Brandenburg மாகாணத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இவரது வீட்டை பொலிசார் சோதனையிட்டதில், தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புடைய நபராக இருந்திருக்க வாய்ப்பில்லை என பொலிசார் கருதுகின்றனர்.
மேலும் இவர் சமீபத்தில் தான் இஸ்லாம் மதத்துக்கு மாறியவர் என்பதும், இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள விழாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.