ஜேர்மனியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் சகோதரர் பரபரப்பு பேட்டி
ஜேர்மனி தலைநகர் பெர்லின் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் தாக்குதல் நடத்திய துனிசியா இளைஞனின் சகோதரர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
பெர்லினில் உள்ள கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டத்திற்குள் அசுர வேகத்தில் புகுந்த லொறியால் 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 50 பேர் படுகாயமடைந்தனர்.
துனிசியா நாட்டை சேர்ந்த Anis Amri என்ற 24 வயதான நபர் இத்தாக்குதலை நடத்தியதாக ஜேர்மனி அறிவித்துள்ளது. மேலும், அவரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
Anis Amri, மூன்று பல்வேறு தேசங்கள் கீழ் ஆறு வெவ்வேறு பெயர்கள் பயன்படுத்தியுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் துனிசியா, Queslatia பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் Anis Amriயின் சகோதரர் Abdelkader Amri கூறியதாவது, என் சகோதரன் பெர்லின் தாக்குதலுக்கு பின்னால் இருந்ததால், நீ எங்களுக்கு அவமதிப்பை ஏற்படுத்திவிட்டாய் என அவரிடம் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆனால், அவர் நிச்சயம் இதை செய்திருக்க மாட்டார் என நான் நம்புகிறேன். எனினும், குடும்பத்திற்காக தானாக முன்வந்து கைதாக வேண்டும் என Anis Amriயிடம் கெஞ்சிக் கேட்டுகொள்வதாக கூறியுள்ளார்.