ஜெயலலிதா வெளிநாட்டு சிகிச்சைக்கு சசிகலா தான் தடையாக இருந்தார் என்ற பரபரப்பு தகவலை ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ளார்.
ஆர்.கே நகரில் தொகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்க்கொண்ட திமுகவின் செயல் தலைவர் மு.க ஸ்டாலின், ஜெயலலிதா வெளிநாட்டுக்கு சிகிச்சை செல்ல ஓ.பன்னீர் செல்வம் தான் தடையாக இருந்தார் என குற்றம்சாட்டினார்.
தற்போது ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள ஓ.பி.எஸ், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது தம்பிதுரையிடம், இங்கு போதுமான சிகிச்சையளிக்க படுவதாக தெரியவில்லை.
அம்மாவை அமெரிக்கா அழைத்து செல்லாம் என நான் கூறினேன். பின்னர் இது குறித்து தம்பிதுரை சசிகலாவிடம் பேசினார்.
பிறகு அமெரிக்காவெல்லாம் வேண்டாம், இங்கு சிகிச்சையளித்தாலே போதும் என சசிகலா கூறிவிட்டதாக அவர் தன்னிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.