ஜெயலலிதா மர்ம மரணம்: சசிகலா, அப்பல்லோ இணைந்து நடத்திய நாடகம் அம்பலம்?
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல வார இதழ் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இடைத்தேர்தலின் போது ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து கொண்டு நான் மறுபிறவி எடுத்துள்ளேன் என அறிக்கை வெளியிட்டது, அதில் கைரேகை வைக்கப்பட்டது, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் என்றெல்லாம் அறிக்கை வெளியானது.
ஆனால் இவையெல்லாம் சசிகலாவும் அப்பல்லோ மருத்துவமனையும் இணைந்து நடத்திய நாடகம் என்பது போல பிரபல தமிழ் வார இதழ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவின் மூலம் ஜெயலலிதா நன்றாக இருக்கிறார், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார், பேசினார் போன்ற தகவல்கள் சசிகலாவும் அப்பல்லோ மருத்துவமனையும் சேர்ந்து நடத்திய நாடகம் என்பது தெரிகிறது.