ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு ஆனந்த் ராஜ் மட்டுமே எடுத்த அதிரடி முடிவு- பரபரப்பை ஏற்படுத்திய செய்தி
தமிழ் சினிமாவில் வில்லனாக பல வருடங்கள் மிரட்டியவர் ஆனந்த் ராஜ். தற்போது இவர் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஆனந்த்ராஜ் ஜெயலலிதாவின் கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்தார், அவரின் இழப்பு பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் இறந்த சில நாட்களிலேயே அந்த கட்சியை சார்ந்தவர்கள் வேறு ஒருவரை தலைமை ஏற்க அழைத்துள்ளனர்.
இதைக்கண்ட ஆனந்த் ராஜ், இது பலரும் சேர்ந்து எடுக்கப்பட வேண்டிய முடிவு, மேலும், ஜெயலலிதாவிற்கு பிறகு வேறு யாரையும் அந்த இடத்தில் நினைத்து பார்க்க முடியவில்லை.
அதனால், நான் அந்த கட்சியிலிருந்து விலகுகிறேன்’ என்று அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார்.