ஜெயலலிதா நயன்தாராவை மட்டும் அனுமதித்தது ஏன்?
ஜெயலலிதா மறைவால் பலரும் வருத்தத்தில் உள்ளனர். இந்த செய்தியை அறிந்து நடிகைகளில் முதல் ஆளாக வந்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியவர் நயன்தாரா.
கடந்த வருடம் சென்னையில் வெள்ளம் வந்து மக்கள் அனைவரும் கஷ்டத்தில் ஆழ்ந்தனர். அப்போது பல நடிகர், நடிகைகள் உதவ முன்வந்தனர்.
பலரும் முதல்வரை சந்தித்து நன்கொடை கொடுக்க முயன்றனர், ஆனால், ஜெயலலிதா, நயன்தாராவை மட்டுமே நேரில் சந்தித்து பணத்தை பெற்றுக்கொண்டார்.
அது ஏன் என்பது தற்போது ரகசியமாகவே ஆகிவிட்டது, அதை தொடர்ந்து அதிமுக சார்பில் நடத்தப்பட்ட ஒரு விழாவில் நயன்தாரா மட்டுமே நேரில் கலந்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் எதிர்காலத்தில் என சிலர் கோலிவுட்டில் கிசுகிசுக்கின்றனர்.