ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி அடித்து கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாட்டில் சொந்தமாக எஸ்டேட் உள்ளது.
முன்னர் ஜெயலலிதா இங்கு சென்று ஓய்வெடுத்து கொள்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று கொடநாடு எஸ்டேட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூர் என்பவர் மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் இருந்த மற்றொரு காவலரான கிஷண்பகதூர் என்பவர் படுகாயங்களுடன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொடநாடு எஸ்டேட்டில் முக்கியமான ஆவணங்கள் பதுக்கி வைக்கப்பட்டிகலாம் எனவும், அதை அபகரிக்க முயன்றபோது இந்த சம்பவங்கள் நிகழ்ந்ததா என்ற கோணத்தில் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் தான் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.