கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் பொலிசாரால் தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
தமிழ்நாட்டின் நீலகிரியில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொகுசு பங்களா உள்ளது.
அங்கு காவலாளியாக இருந்த ஓம் பகதூர் என்பவர் சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் அடித்து கொல்லபட்டார்.
மற்றொரு காவலாளியான கிஷன் பகதூர் கொடூரமாக தாக்கபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த வழக்கில் இதுவரை மூன்று பேர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் கூறி வருகின்றனர். ஆனால் தற்போது வரை அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை
இந்நிலையில், கொடநாடு எஸ்டேட்டில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிக்க ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் தான் ஆட்களை வைத்து காவலாளியை கொலை செய்ததாக பொலிசார் கூறினார்கள்.
இது தொடர்பாக அவர்கள் கனகராஜை தேடி வந்த நிலையில், நேற்று இரவு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மர்மமான முறையில் அவர் உயிரிழந்து கிடந்தார்.
கனகராஜை பொலிசார் சுட்டு கொன்று விட்டதாக தகவல் பரவியது. ஆனால் கனகராஜ் சாலை விபத்தில் இறந்து விட்டதாக பொலிசார் கூறியுள்ளனர்.
ஆனாலும், கனகராஜின் இறப்பில் மர்மம் நீடித்து வருகிறது.