ஜெயலலிதாவின் கட்சி சின்னம் யாருக்கும் சொந்தமில்லை! தேர்தல் ஆணையம் அதிரடி
இரட்டை இலைச் சின்னம் யாருக்கும் இல்லை என தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற போட்டி நடந்து வந்திருந்தது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் முறைப்பாட்டினை தெரிவித்திருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இரட்டை இலைச்சின்னம் எங்களுக்குச் சொந்தமானது என்று அறிவியுங்கள். இல்லையேல் யாருக்கும் சொந்தமில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, சற்றுமுன்னர் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அதிமுகவின் இரட்டை இலையானது யாருக்கும் சொந்தமில்லை என்றும், அதனை தேர்தலில் பயன்படுத்த முடியாது என்றும் அறிவித்தது.
இது அதிமுகவின் இரண்டு அணியாக பிரிந்திருக்கும் பன்னீர், சசிகலா தரப்பினர் அக்கட்சிக்கும், சின்னத்திற்கும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு இரண்டு தரப்பினரையும் ஏமாற்றமடைய வைத்துள்ளது.