மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயில் தன்னிடம் இருப்பதாக அவரின் அண்ணன் மகன் தீபக் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியின் போதே தீபக் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
தீபக் கூறியதாவது, மறைந்த என் அத்தை ஜெயலலிதா எழுதிய உயில் என்னிடமே உள்ளது.
அந்த உயிலில் சொத்துகள் அனைத்தும் என் பெயரிலும், என் சகோதரி தீபா பெயரிலும் எழுதப்பட்டுள்ளது.
சென்னை போயஸ் கார்டன் இல்லம், கோடநாடு எஸ்டேட், ஐதராபாத் திராட்சை தோட்டம் உட்பட எட்டு சொத்துகள் எனக்கு சொந்தம் என தீபக் கூறியுள்ளார்.