தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஜெயம் ரவி கதையின் நாயகனாகவும், கதாநாயகனாகவும் நடித்திருக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ எனும் திரைப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இதற்காக பிரத்யேக காணொளி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டு, படத்தின் பாடல்களைப் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ எனும் திரைப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகி பாபு, வினய் ராய், டி ஜே பானு, ஜான் கொக்கன், லால், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை புயல்’ ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து படப்பிடிப்பிற்கு பிந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற சிங்கிள் ட்ராக் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் பாடலுக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் படக் குழுவினர் பிரத்யேக காணொளி ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.