ஜெயசூர்யா நடிப்பில் வரும் கிறிஸ்துமஸ் ரிலீசாக வெளியாக உள்ள படம் ‘ஆடு-2’.. இந்தப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்தப்படத்தில் ஜெயசூர்யா அணிந்துள்ள வேஷ்டி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.
சட்டைகளில் மட்டுமே வெளிவந்த இரண்டு பக்கமும் பயன்படுத்தும் டிசைன், இந்தப்படத்தில் ஜெயசூர்யா அணியும் வேட்டிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த உடையை ஜெயசூர்யாவின் மனைவியும் காஸ்ட்யூம் வடிவமைப்பாளருமான சரிதா தானே உருவாக்கியுள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையில் ரசிகர்களின் பேவரைட் ஆக இந்த மாடல் வேட்டி மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.