ஜல்லிக்கட்டு அழிக்கப்பட்டு விடுமோ? விஜய் சேதுபதி உருக்கமான பேச்சு – வீடியோ
பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலிறுயுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.
சினிமாவை சேர்ந்த பலரும் தனது கருத்துக்களை வெளியீட்டுக்கு வருகின்றனர். நடிகர் விஜய் சேதுபதி இது குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் சொல்லும் போது எப்படி இம்மண்ணில் பிறந்த நமக்கு உரிமை உள்ளதோ அதே போல நம்முடன் இருக்கும் கால்நடைகளுக்கும் உரிமை உண்டு.
எனக்கு தெரிந்தவரை இங்கு காளைகள் மிருகவதை செய்யப்படவில்லை. அவற்றின் இனங்களை பாதுகாக்க வேண்டும். அவர் பூலோகம் படத்தின் வசனத்தையும் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு பெரிய பிரச்சனைக்கு பின்னாலும் பெரிய வியாபாரம் இருக்கும் என்பார்கள், அதுபோல ஜல்லிக்கட்டுக்கு பின்னாலும் இருக்கிறதோ என பயம் இருக்கிறது.
ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். அதற்க்கு என் ஆதரவு என கூறியுள்ளார்.