ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுத்த நடிகர் சூர்யா
ஜல்லிக்கட்டுக்கு இருக்கும் தடை நீங்கியே ஆக வேண்டும், தமிழர் பண்பாட்டை நிலைநாட்ட வேண்டும் என போராடும் இளைஞர்கள் பலர்.
தமிழ்நாடே இப்போது போர்க்களமாக காணப்பட்டு வருகிறது. காலை முதல் பிரபலங்களான டி.ராஜேந்தர், மயில்சாமி, ஜி.வி. பிரகாஷ் என அனைவரும் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சூர்யா ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுத்து டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.