ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் ஏற்படும் உடன்பாட்டின் அடிப்படையில், ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன மலர் மொட்டு சின்னத்தில் பொதுஜன பெரமுனவின் கீழும், கோட்டாபய ராஜபக்ச போட்டியிடுவதாயின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் கைச் சின்னத்திலும் போட்டியிட வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தெரிவாகும் நபர், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெற்றவராக இருக்க வேண்டும் என்பது பிரதானமானது எனவும் அவர் கூறினார்.
இரு கட்சிகளும் சேர்ந்து ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை நியமிப்பதற்கான மிகச் சிறந்த சூத்திரம் இதுவாகும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.