எதிர்வரும் ஜனவரி மாதம் 1 ஆம் திகதியிலிருந்து இலங்கையில் பொலித்தீனுக்கான தடை கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றாடல் அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.
இலங்கையில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் பாவனை காரணமாக சுற்றாடலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களைக் குறைக்கும் வகையில் மேற்படி தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
உணவு பொதி செய்ய பயன்படும் லஞ்சீற் உற்பத்தி செய்தல், பயன்படுத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியன தடை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் அரசியல், மத மற்றும் கலை நிகழ்வுகளில் பொலித்தீன் பயன்படுத்தி அலங்காரம் செய்தலும் தடை செய்யப்பட்டுள்ளது என மேலும் தொிவித்தாா்.
எனவே பொலித்தீன் பாவனைக்கு பதிலாக கடதாசி, ஓலையில் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் துணிப்பை போன்றவற்றின் பாவனையை ஊக்குவிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.