சொந்த மண்ணில் விழிபிதுங்கிய இலங்கை: மேற்கிந்திய தீவுகள் அணி இமாலய வெற்றி
இலங்கை- மேற்கிந்திய தீவுகள் ’ஏ’ அணிகள் அதிகாரப்பூர்வமற்ற 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் தம்புள்ள மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 267 ஓட்டங்கள் குவித்தது.
கயில் கோப் (81), அணித்தலைவர் ஜாசன் முகமது (58), ரொவன் பவல் (55) ஆகியோர்கள் அரைசதம் அடித்தனர்.
இலங்கை அணி சார்பில் பெர்னாண்டோ, அபோனசோ ஆகியோர்கள் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.
இதனையடுத்து 268 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது.
அனைத்து வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அந்த அணி 32.3 ஓவரிலே 102 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 165 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.
மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஜக்கீஸ்யர் 4 விக்கெட்டும், பீட்டான் 3 விக்கெட்டும், ஜான்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.