தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தன் சொத்துக்களுக்கு வாரிசாக யாரையும் நியமிக்கவில்லை என்ற விடயம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் உறுதியாகியுள்ளது.
தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பலரும் அறியாத தகவல்களை சமூக ஆர்வலரான பாஸ்கர் என்பவர் வெளியிடுவது வழக்கமாகும்.
இதன் மூலம் மறைந்த ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு யார் வாரிசு என்ற கேள்வியை அவர் எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள தகவல் அறியும் உரிமை சட்டம், ஜெயலலிதா இதுவரை யாரையும் தன் வாரிசுதாரர் எனக் குறிப்பிடவில்லை.
மேலும் அதுதொடர்பான எந்த ஒரு தகவலும் தமிழக அரசுக் குறிப்பில் இல்லை என பாஸ்கருக்கு பதிலளித்துள்ளது.
ஜெயலலிதாவின் உயில், வாரிசுதாரர் தகவல் என எதை பற்றியுமான தகவல்களும் இல்லை என பாஸ்கருக்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு உரிமை கோர சட்டப்படி யாரும் இல்லாத காரணத்தால் அவற்றை மாநில அரசின் உடைமையாக்க வேண்டும் என பாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.