சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், நயன்தாரா, விஜய் சேதுபதி, சுதீப் உள்ளிட்டவர்கள் நடிக்கும் ‘சைரா’ படத்தில் அனுஷ்கா சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளிவந்தன. ஆனால், அவர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது சஸ்பென்ஸ் ஆகவே இருந்தது. இருப்பினும் அவர் ஜான்சி ராணியாக நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் பரவின.
இந்நிலையில் படத்தில் அனுஷ்கா, ‘ஜான்சிராணி’ கதாபாத்திரத்தில் நடிப்பதாக சிரஞ்சீவி உறுதி செய்துள்ளார். சைராவிற்கும் ஜான்சிராணி வாழ்க்கை வரலாற்றிற்கும் பத்து ஆண்டுகள் வித்தியாசம் உள்ளது.
ஆங்கிலேயர்களை எதிர்ப்பதில் சைராவை தன்னுடைய முன்னோடியாக ஜான்சிராணி கொண்டுள்ளதாக படத்தில் சொல்லியிருக்கிறார்களாம். போர்க்களத்தில் இருந்து சைராவின் வாழ்க்கை வரலாற்றை ஜான்சிராணி விவரிப்பதாகத்தான் படம் ஆரம்பமாகிறதாம்.