சைட்டம் மருத்துவக் கல்லூரி தொடர்பில் சகல தரப்பையும் கூட்டி பேச்சுவார்த்தை நடாத்தி விரைவில் தீர்வொன்றை முன்வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்று மகாநாயக்கர்களும் இணைந்து அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மல்வத்து பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர், அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரகாகொட தம்மதஸ்ஸாபிதான, அமரபுர மகாநாயக்கர் கொடுகொட ஸ்ரீ தம்மாவாசாபிதான ஆகியோரே இந்த வேண்டுகோளை எழுத்து மூலம் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.