அமெரிக்க பார்லிமென்டில், செலவின மசோதா நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அமெரிக்க அரசு அலுவலகங்கள், நேற்று முதல் மூடப்பட்டன.அமெரிக்க அரசு அலுவலகங்கள், பிப்., ௧௬ வரை செயல்படத் தேவையான நிதி வழங்கக் கோரி, குறுகிய கால செலவின மசோதா, அந்நாட்டு பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது.
எதிர்க்கட்சியான, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, ௬௦ உறுப்பினர்கள், இந்த மசோதாவுக்கு எதிராக ஓட்டளிததனர். மசோதா நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அமெரிக்காவில் உள்ள, பல அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன.
ராணுவம், போலீஸ், தீயணைப்பு, தபால் துறை போன்ற, அத்தியாவசிய துறைகள் மட்டுமே செயல்படுகின்றன. ‘ஆனால், இந்த கால கட்டத்தில் வேலை செய்ததற்கு, அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது’ என, அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம், அமெரிக்க அரசு அலுவலகங்களில் பணியாற்றும் எட்டு லட்சம் ஊழியர்கள், பணிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன், ௧௯௯௬ல், ௨௧ நாட்களும், ௨௦௧௩ல், ௧௬ நாட்களும், அமெரிக்க அரசு அலுவலகங்கள் இது போல மூடப்பட்டன.