இலங்கைக்கு எதிராக செயற்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் செய்த் ராத் ஹுசைனின் சேவைக்காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நிறைவுக்கு வரவுள்ளதாகவும், இது எமது நாட்டின் வட பகுதியில் உள்ள அரச சார்பற்ற செயற்பாட்டாளர்களுக்கு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வட மாகாண சபை அமைச்சர் ஆனந்தி சசிதரன் உட்பட அரச சார்பற்ற அமைப்புக்களின் நடவடிக்கைகள் பெரும் சிக்கல் நிலைக்குள்ளாகியுள்ளதாக சகோதர மொழி தேசிய ஊடகமொன்று இன்று சுட்டிக்காட்டியுள்ளது.
ஜெனீவா பிரரேரணையை நடைமுறைப்படுத்துவதற்கு இருந்த எமது சகல எதிர்பார்ப்புக்களும் வீணாகியுள்ளது என ஆனந்தி சசிதரன் விடுத்துள்ள அறிவிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளதாகவும் அச்செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் ஏற்படுத்திக் கொண்ட முறுகல் நிலையினால் தான் எதிர்வரும் செப்டம்பர் மாதம் பதவியிலிருந்து வெளியேறவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குவின் ஆணையாளர் நாயகம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது எனவும் அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.