ரொறொன்ரோ–மார்ச் மாதத்தில் ரொறொன்ரோ பகுதியில் ரியல் எஸ்டேட் விலைகள் மீண்டும் உச்சம் பெற்றுள்ளதாக இந்த ஏற்றம் 33.2 சதவிகிதம் பாய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு கடந்த வருடத்தை விடவும் மற்றும் பிப்ரவரியை விடவும் ஐந்து சதவிகிதம் எனவும் கூறப்பட்டுள்ளது.
ரொறொன்ரோ ரியல் எஸ்டேட் சபை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கடந்தமாதம் ரொறொன்ரோவின் சராசரி விலை டொலர்கள் 916,567 ஆக அதிகரித்துள்ளது.
2016 மார்ச் மாதம் 688,011 டொலர்களிலிருந்து அதிகரித்துள்ளதாகவும் பிப்ரவரி 2017ல் 875,983 டொலர்களிலிருந்து 4.6சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் அறியப்படுகின்றது.
விற்பனைக்கு விடப்பட்டுள்ள சொத்துக்களின் எண்ணிக்கை கடந்த வருடம் இதே நேரத்தை விட 15.2சதவிகிதம் அதிகரித்துள்ளதெனவும் விற்பனை 17.7 சதவிகிதம் அதிகரித்துள்ளதெனவும் சபை தெரிவிக்கின்றது.
வழங்கீட்டை விட தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் விலை ஏற்றம் அடைகின்றது. இப்போக்கு மேலும் தொடரும் என கருதப்படுகின்றது.