சென்னை மண்ணில் அசத்தல்: 31 வருடங்களுக்கு பிறகு உலக சாதனை படைத்த அஸ்வின்
சகலதுறை வீரராக ஜெலித்து வரும் இந்திய வீரர் அஸ்வின் 31 ஆண்டுகளுக்கு பிறகு உலக அளவில் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் அரங்கில் சுழலில் மட்டும் அசத்தி வந்த அஸ்வின் தற்போது எல்லாம் துடுப்பாட்டத்திலும் பட்டையை கிளப்பி வருகிறார்.
ஒரு டெஸ்ட் தொடரில் 250 ஓட்டங்களும், 25 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்தவர்கள் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 7 பேர் மட்டும் உள்ளனர். தற்போது இந்த பட்டியலில் இந்திய அணியின் சகலதுறை வீரரான அஸ்வினும் இணைந்துள்ளார்.
இந்த சாதனையை தற்போது நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலே அவர் நிகழ்த்தியுள்ளார்.
முன்னதாக இந்திய அணி சார்பில் கபில் தேவ் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அவர் 1979-80ம் ஆண்டில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான 6 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 278 ஓட்டங்களும், 32 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்.