15-வது சர்வதேச சென்னை திரைப்பட விழா டிசம்பர் 14-ஆம் தேதி துவங்கி 21-ஆம் தேதி வரை சென்னயில் நடைபெறுகிறது. சென்னையிலுள்ள தேவி, தேவிபாலா, சத்யம், கேசினோ, அண்ணா, தாகூர் பிலிம் சென்டர், ரஷ்யன் கல்சுரல் சென்டர் ஆகிய திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றது.
இந்த திரைப்பட விழாவில் மாநகரம், 8 தோட்டாக்கள், அறம், கடுகு, குரங்கு பொம்மை, மகளிர் மட்டும், மனுசங்கடா, ஒரு கிடாயின் கருணை மனு, ஒரு குப்பை கதை, தரமணி, துப்பறிவாளன், விக்ரம் வேதா ஆகிய 12 தமிழ் திரைப்படங்கள் திரையிட தேர்வு செய்யப்பட்டது.
திரைப்பட விழா தொடங்கப்பட்ட பிறகு இந்தப்பட்டியலில் உதயநிதி ஸ்டாலின் நடித்த இப்படை வெல்லும் படமும் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு காட்சியாக திரையிடப்படுகிறது.
விழா துவங்கிய பின்னர் எந்த அடிப்படையில் திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்தார்கள் என்று திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.