சூர்யாவுக்கு நடிப்பு, டான்ஸ் வரவில்லை! ரஜினிகாந்த் ஓபன்டாக்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேந்த கூட்டம் படத்தில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார் சூர்யா. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஜினிகாந்த் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் பேசிய சூப்பர் ஸ்டார் தான் பெங்களூரில் சூர்யா படத்தை பார்க்க மாறு வேடத்தில் சென்றதாகவும், ஒரு IPS அதிகாரியாக அவர் சிறப்பாக நடித்திருக்கிறார். வெறும் உடலளவில் நடிப்பதாக இல்லாமல் மற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு முன் உதாரணமாகவும் இருப்பது போல இருந்தது என கூறினார்.
மேலும் சூர்யாவின் முதல் படத்தை பார்த்தேன். நடிப்பு வரவில்லை, டான்ஸ் வரவில்லை, இப்போது நடிக்கும் படங்களில் பார்த்தால் தூள் பண்ணுகிறார் என ரஜினி தன் ஸ்டைலில் சூர்யாவை பாராட்டி பேசினார்.
இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.