நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சூரிய மின்சக்தி படலங்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை காலை 90.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரையும் நிறுத்துமாறு இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் அனைத்து கூரைகளிலும் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்சக்தி படலங்களை நிறுத்துமாறு சூரிய மின்சக்தி படலங்களின் உரிமையாளர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விடுமுறை காலத்தில் கடும் வெப்பநிலை காரணமாக சூரிய மின்சக்தி அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றது.
ஆனால் விடுமுறை காலம் என்பதால் பல தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் குறைந்தளவில் மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன.
இதனால் அதிகளவில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டால் அது அபாயத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இது மின்சார கட்டமைப்பில் அபாயத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.