அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மாணவியின் மரணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார்.
குறித்த மாணவி கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில், உயிரிழந்திருந்தார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் சமகால அரசின் முக்கிய அமைச்சரின் நெருங்கிய சகா என மஹிந்த தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவரை 3 பேர் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த மாணவியின் காதலன் மற்றும் அவரது இரண்டு நண்பர்களினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்த நிலையில் சந்தேக நபர்களான இளைஞர்களை நையுடைப்பு செய்த பிரதேச மக்கள் பொலிஸ் நிலையில் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் தற்போது மாணவியின் மரணம் தொடர்பான பிரதான சந்தேகநபரின தகவலை மஹிந்த வெளியிட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் மஹிந்த இந்த தகவலை வெளியிட்டார்.
அவரது உரையில், “அண்மையில் பாடசாலை மாணவி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார். திஸ்ஸமஹாராம பிரதேசத்தை சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யபட்டிருந்தார்.
3 இளைஞர்கள் இணைந்து இந்த துஷ்பிரயோகத்தை செய்தனர். அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் கழுத்தில் கை போட்டிருக்கும் இளைஞனே இந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபராகும். இருவரும் அமர்ந்து கட்டியணைத்தவாறு உள்ளனர். அவர் தான் முதலாவது சந்தேகநபராகும்.
இந்த நிலையில் அந்த சம்பவத்தினை மூடி மறைப்பதற்கு முயற்சிப்பதாக மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.